தமிழக மின்சார வாரியம் மீளமுடியாத கடன் சுமையில் சிக்கித் தவிப்பதால், மின் திட்டங்களுக்கு வழங்கப்படும் கடனுதவியை மத்திய அரசு நிறுத்தக்கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாசு வலியுறுத்தியுள்ளார்.
தமிழக அரசுத்துறைகள், மின்சார வாரியத்திற்கு செலுத்த வேண்டிய மின் கட்டணத்தை அடுத்த 3 மாதங்களில் அளிக்காவிட்டால், தமிழக மின் திட்டங்களுக்கு மத்திய அரசு வழங்கி வரும் கடனுதவி நிறுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் ஆர்.கே. சிங் எச்சரித்திருந்தார்.
இந்நிலையில் அது குறித்து அறிக்கை விடுத்த ராமதாஸ், குறைந்த விலைக்கு மின்சாரம் வழங்குதல், 100 யூனிட் இலவச மின்சாரம், உழவர்களுக்கு இலவச மின்சாரம் ஆகிய சமூக நலத்திட்டங்களால் மாநில அரசிற்கு ஆண்டுதோறும் 8 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமிழகத்திற்கு கடனுதவி வழங்கும் திட்டத்தை கைவிடுவதை நிறுத்திவிட்டு, மின்சார வாரிய நிதி நிலையை மேம்படுத்த உதவி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.