நெல்லை மாவட்டம் கூடங்குளம் முதல் அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது.
கூடங்குளம் அணுமின்நிலையத்தில் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தித் திறனுள்ள 2 அணு உலைகள் உள்ளன. 2-வது அணு உலையில் பராமரிப்பு பணிக்காக கடந்த மாதம் 15-ஆம் தேதி மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
முதல் அணு உலையில் 900 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்ற நிலையில் சில நாட்களுக்கு முன் திடீரென வால்வில் பழுது ஏற்பட்டதால் அதுவும் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் பழுது சரி செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது.
தற்போது 410 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெறும் நிலையில் படிப்படியாக முழுத் திறனன 1,000 மெகாவாட் மின் உற்பத்தி இலக்கை அடையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Watch Polimer News Online at https://bit.ly/2Qrv39p