செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

SSI கொலையில் 2 பேர் கைது.. திடுக்கிடும் வாக்குமூலம்..?

Jan 16, 2020 04:51:49 PM

தங்களது இயக்கத்தினரை என்ஐஏ அதிகாரிகள் தொடர்ந்து கைது செய்து வருவதால், பழிவாங்கும் நடவடிக்கையாக எஸ் எஸ் ஐ வில்சனை சுட்டுக்கொன்றதாக கைதான இரு தீவிரவாதிகளும் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குமரி மாவட்டம் களியக்காவிளை எஸ் எஸ் ஐ வில்சன் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக கர்நாடாகா மாநிலம் உடுப்பி ரயில் நிலையத்தில் தவுபீக், அப்துல் சமீம் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இன்று அதிகாலை 5.30 மணிக்கு களியக்காவிளை காவல் நிலையம் கொண்டு வரப்பட்டனர்.

எஸ்பி ஸ்ரீநாத் தலமையிலான தனிப்படையினர், கியூ பிரிவு மற்றும் தீவிரவாத தடுப்பு படையினர் ஆகியோர் விடிய விடிய விசாரித்தனர். அப்போது இருவரும் தமிழ்நாடு நேஷனல் லீக் இயக்கத்தைச்சேர்ந்தவர்கள் என்றும், ஐஎஸ் ஐஎஸ் இயக்கத்துடன் நேரடி தொடர்பு வைத்திருந்ததாக கூறியதாக சொல்லப்படுகிறது.

மேலும் தங்களது இயக்கத்தினர் மற்றும் அல்உம்மா, ஐஎஸ்ஐஎஸ் போன்ற அமைப்புகளை சேர்ந்த பலரையும் தேசிய புலனாய்வு துறை கைது செய்து வருவதால், எஸ் எஸ் ஐ யை சுட்டுகொன்றோம் என்று கூறியுள்ளதாக போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

விசாரணைக்குப்பின் இரு தீவிரவாதிகளும் தக்கலை காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டனர். நண்பகலில் அவர்களை நீதிபதி முன் ஆஜர் படுத்தி பாளையங்கோட்டை சிறையில் அடைக்க, போலீசார் திட்டமிட்டுள்ளனர். பின்னர் முறைப்படி காவலில் எடுத்து விசாரிக்கவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே கைதான இரு தீவிரவாதிகளிடம் தக்கலை காவல் நிலையத்தில் தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருவதால், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு, 21 கமாண்டோ படை வீரர்கள் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

காவல் நிலையத்தின் உள்ளேயும், வெளியேயும் துப்பாக்கி ஏந்திய வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் தக்கலை சந்திப்பு உள்ளிட்ட முக்கிய இடங்களில் சாதாரண உடையில் 50 போலீசாரும், சீருடை அணிந்த 25 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் நெல்லை சரக டிஐஜி பிரவீன் குமார் அபினவ், விசாரணை அதிகாரியான எஸ்.பி. ஸ்ரீநாத் ஆகியோர் தக்கலை காவல் நிலையத்தில் வைத்து தீவிரவாதிகளிடம் நேரடி விசாரணை நடத்தினார்கள்.

அதன்பின்பு குழித்துறை அரசு மருத்துவர்கள் காவல் நிலையம் வந்து இரு தீவிரவாதிகளுக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். தொடர்ந்து குழித்துறை நீதிபதி முன் இருவரையும் ஆஜர் படுத்த போலீசார் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

 

Watch Polimer News Online at https://bit.ly/2Qrv39p

 


Advertisement
வாந்தி, வயிற்றுபோக்கு ஏற்பட்டு 4 வயது குழந்தை உயிரிழப்பு
ஆந்திர மாநில பக்தர்கள் வந்திருந்த பேருந்தில் ஏறி திருட முயற்சி... போலீசில் பிடித்துக் கொடுத்த பொதுமக்கள்
அமைச்சர் பெரியகருப்பன் மீதான தேர்தல் தகராறு வழக்கை ரத்து செய்தது ஐகோர்ட்
15 இரும்பு சத்து மாத்திரைகளை ஒரே நேரத்தில் உண்ட பள்ளி மாணவன்
கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் வழக்கறிஞர்கள் சாலை மறியல்
காரைக்குடி விமான நிலையத்தை பயன்பாட்டுக்குக் கொண்டுவரக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்த மதுரை உயர்நீதிமன்றம்
நெல்லை அ.தி.மு.க நிர்வாகிகளின் ஆதரவாளர்களிடையே கைகலப்பு
ஆற்றில் நீரெடுக்கும் தண்ணீர் தொட்டியில் உறங்கும் முதலை... முதலையைப் பிடித்து செல்ல வனத்துறையிடம் கோரிக்கை
மண்டல அளவிலான உயர்கல்வித்துறை பங்களிப்போர் கலந்தாய்வு கூட்டம்
நடிகை சீதா வீட்டில் நகை திருடு போன விவகாரம் குறித்து போலீசார் விசாரணை

Advertisement
Posted Nov 22, 2024 in இந்தியா,Big Stories,

அதானி குழுமத்தின் மீது அமெரிக்கா பகீர் புகார்.. அதிகாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம்? ப்ரூக்ளின் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு..

Posted Nov 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சினிமா பாணியில் கொலை.. ஆட்டோ குணாவை ஊசியால் ஆப் செய்த திருநங்கைகள்..! வாசலில் காவல் காத்த மனைவி..

Posted Nov 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

“அந்த பையன் வேண்டாங்கா... தம்பியின் பேச்சை கேட்ட ஆசிரியைக்கு நேர்ந்த சோகம்..! பள்ளியில் கத்தி குத்து சம்பவ பின்னணி

Posted Nov 20, 2024 in உலகம்,Big Stories,

அமெரிக்க ஏவுகணைகளை ஏவிய உக்ரைன் அணு ஆயுதங்களை கையில் எடுக்கும் ரஷ்யா ஆட்டம் காணும் நேட்டோ நாடுகள்... அணு ஆயுதம் என்ற பிரம்மாஸ்திரம்.. உச்சகட்ட பதற்றத்தில் ரஷ்யா-உக்ரைன் எல்லை..

Posted Nov 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

புதிய தமிழ்ப் படத்தை 7 நாட்கள் கழித்து தான் விமர்சனம் செய்யனுமாம்..! கங்குவாக்கு விழுந்த அடி அப்படி..!


Advertisement