கஜா புயலில் வீடுகளை இழந்தவர்களுக்காக கட்டப்படும் புதிய வீடுகளுக்கான நிதியை 3 லட்சம் ரூபாயாக உயர்த்தியதற்கு, துணை முதலமைச்சருக்கு அமைச்சர் ஓ.எஸ் மணியன் நன்றி தெரிவித்துள்ளார்.
வேதாரண்யம் அடுத்த வெள்ளப்பள்ளம் கிராமத்தில் அம்மா இளைஞர் விளையாட்டு திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அனைவருக்கும் வீடு என்கிற திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியை உயர்த்தி ஆணை வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.