கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான தேர்தலை ஒத்திவைத்ததற்கு எதிரான வழக்கில், தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், கடந்த11-ஆம் தேதி நடைபெற இருந்த மறைமுக தேர்தல், தேர்தல் அதிகாரியின் உடல்நிலையை காரணம் காட்டி ஒத்தி வைக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. எனவே தேர்தலை ஒத்தி வைத்த உத்தரவை ரத்து செய்து, தனிப் பார்வையாளர் அல்லது வழக்கறிஞர் ஆணையத்தை நியமித்து தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டிருந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், இது தொடர்பாக தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வருகிற 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.