ஊரக உள்ளாட்சி மறைமுக தேர்தல் சில இடங்களில் நிறுத்தப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் திமுக முறையீடு செய்துள்ளது.
மாவட்ட ஊராட்சித் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஒரு இடத்திலும், ஊராட்சி ஒன்றியங்களில் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் 27 இடங்களிலும் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், திமுக வெற்றி பெறும் நிலையில் இருந்த கடலூர், தர்மபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தலை நிறுத்தப்பட்டதாகக் கூறி, உயர்நீதிமன்ற நீதிபதி சத்தியநாராயணன் அமர்வில் முறையீடு செயப்பட்டது.
சேலம், கரூர் மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கையின்போது பதிவு செய்யப்பட்ட கண்காணிப்பு கேமிரா பதிவுகளை தாக்கல் செய்ய கோரி திமுக ஏற்கனவே தொடர்ந்துள்ள வழக்கில் கூடுதல் மனுவாக தாக்கல் செய்ய நீதிபதி அறிவுறுத்தினார்.