காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டம் தயாராகி விட்டது என்றும் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வர இருப்பதாகவும் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கரூரில் கொங்கு கல்வி அறக்கட்டளையின் சார்பில் நடைபெற்ற 25ம் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், கரூர் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் மன நிறைவுடன் தம்மால் முடிந்த பணிகளை சிறப்பாக செய்து வருவதாக கூறினார்.