மதுரை மாவட்டம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டை முன்னிட்டு காளைகள் தயார்படுத்தப்பட்டு வருகின்றன.
அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டை நடத்தும் விவகாரத்தில் இரு தரப்பினரிடையே கருத்து வேறுபாடு இருந்து வந்த நிலையில் அதனை அரசு விழாவாக நடத்தலாம் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. இந்நிலையில் அவனியாபுரத்தில் மாடுகளுக்கு நீச்சல், கொம்புகளால் மண்ணைக் குத்தச் செய்தல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
அவனியாபுரத்தில் வாடிவாசல், மேடைகள் உள்ளிட்டவை அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் நாளை காளைகளுக்கு டோக்கன் வழங்குதல், வீரர்களுக்கான உடற் தகுதி பரிசோதனை பதிவு உள்ளிட்ட பணிகள் நடைபெறவுள்ளன.