ஊரக உள்ளாட்சி மறைமுக தேர்தலில் கரூர் மாவட்டத்தில் அ.தி.மு.க. 100 சதவீத வெற்றி பெற்றுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் பெருமிதம் தெரிவித்தார்.
கரூரில் அவர் 15 புதிய பேருந்துகளை தொடங்கி வைத்தார். அரசு போக்குவரத்துக் கழகத்தின் விபத்து தடுப்பு விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தையும் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கழிவறையுடன் கூடிய பேருந்துகள், குளிர்சாதன பேருந்துகள் என குறைந்த கட்டணத்தில், நிறைவான சேவையை போக்குவரத்து துறை வழங்குவதாக அவர் கூறினார்.