சூரியனில் மின்காந்த புயல் ஏற்பட்டு பூமியை பல கோணங்களில் கதிர்வீச்சு தாக்கும் அபாயம் இருப்பதாக நாசா விண்வெளி மூத்த விஞ்ஞானி கோபால்சாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அப்ஜர்வேட்டரி பகுதியில் உள்ள வானிலை ஆராய்ச்சி நிலையத்தில் நாசா விஞ்ஞானி கோபால்சாமி கூறுகையில், இந்த விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் சூரியனை பற்றியும், சூரியனில் இருந்து வெளிவரும் கரும்புள்ளிகள் மற்றும் சூரிய சக்கரம் குறித்தும் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.