வைகுண்ட ஏகாதசி விழாவில் 5 நாட்களில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் 4 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
அந்த கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா டிசம்பர் மாதம் 26-ந் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்க வாசல் திறப்பு கடந்த 6-ந் தேதி நடைபெற்றது.
தொடர்ந்து ராப்பத்து நாள் நிகழ்ச்சி நடந்து வருகிறது.ராப்பத்து நாட்கள் நிகழ்ச்சியில் சொர்க்கவாசல் திறந்திருக்கும் என்பதால் கடந்த 6-ந் தேதி கோவிலுக்கு வர முடியாதவர்கள், தற்போது தரிசனத்திற்கு வந்து செல்கின்றனர்.
இதனால் கடந்த 6-ந் தேதி முதல் நேற்று வரை 5 நாட்களில் 4 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாக கோவில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அடுத்த நான்கு நாட்களில் மேலும் 4 லட்சம் பக்தர்கள் வருவார் என்று எதிர்பார்ப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.