ஈரோடு மாவட்ட ஊராட்சி தலைவராக தேர்வாகியுள்ள அதிமுகவை சேர்ந்த நவமணி கந்தசாமியை அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.சி. கருப்பணன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலை 11 மணிக்கு ஆட்சியர் கதிரவன் முன்னிலையில் தொடங்கிய, மறைமுக தேர்தலில் வார்டு உறுப்பினர்கள் வாக்களித்தனர். வாக்குப்பதிவு முடிந்த நிலையில் இறுதியாக அதிமுகவை சேர்ந்த 6-வது வார்டு உறுப்பினரான நவமணி கந்தசாமி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து வெற்றி பெற்ற நவமணி கந்தசாமியை, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கேசி கருப்பணன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.