செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

குரூப் 2A முறைகேடு.. விசாரணை தொடங்குவது எப்போது?

Jan 11, 2020 07:18:02 AM

குரூப் 4 தேர்வு முறைகேடு புகார்  குறித்து டிஎன்பிஸ்சி விசாரணையை தொடங்கி இருக்கும் நிலையில், குரூப் 2 ஏ தேர்வு மோசடி தொடர்பாகவும் விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.  

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வை 16 1/2 லட்சம் பேர் எழுதிய நிலையில் முதல் 100 இடங்களை பிடித்தவர்களில் ராமநாதபுரம் மாவட்டத்தின் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதிய 40 பேர் முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பதாக புகார் எழுந்தது.

இந்த இரு தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய அந்த 40 பேரில் 90 சதவீதம் பேர் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகின்றது. உதாரணத்துக்கு இந்த தேர்வில் மாநில அளவில் முதல் இடம் பிடித்த சிவகங்கை மாவட்டம் பெரிய கண்ணனூர் கிராமத்தை சேர்ந்த திருவராஜ் என்னும் ஆடு வளர்க்கும் தொழிலாளி.

தொடர்ந்து படித்து இந்த தேர்வை எழுதியவர்கள் கூட 300க்கு 250 மதிப்பெண்ணை எட்டிப்பிடிப்பது சவாலான விஷயம் என்ற நிலையில் ஆடு வளர்க்கும் தொழிலை பிரதானமாக செய்து சற்று வசதியுடன் வாழ்ந்து வரும் திருவரசு என்று அழைக்கப்படும் திருவராஜ், 300க்கு 289.5 மதிப்பெண் எடுத்தது எப்படி என்பது மில்லியன் டாலர் கேள்வியாக எழுந்தது.

இந்த தேர்வு முறைகேடு தொடர்பாக தேர்வாணையம் விசாரணையை தொடங்கி உள்ள நிலையில், முறைகேட்டில் ஈட்டுபட்டு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற கருப்பு ஆடுகள் கலக்கத்தில் உள்ளதாக கூறப்படுகின்றது. பலர் விசாரணைக்கு ஆஜராகாமல் இருப்பதற்காக, தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகின்றது.

இவரது ஊருக்கு அருகில் இளையன் குடியில் ஒரு தேர்வு மையம், சிவகங்கையில் ஒரு மையம் என்று இரு மையங்கள் உள்ள நிலையில் அங்கிருந்து 64 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தேர்வு மையத்தை தேடிச்சென்றது ஏன்? என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில், திடீரென செய்தியாளர்களை சந்தித்த, திருவராஜு, தாம் எந்த முறைகேட்டிலும் ஈடுபடவில்லை என்றும் மீண்டும் தேர்வு வைத்தாலும் எழுத தயாராக உள்ளதாகவும் விளக்கமளித்தார்.

அதிக மதிப்பெண் பெற்று தேர்வானவர்களை, சென்னைக்கு அழைத்து விசாரிக்க, டி.என்.பி.எஸ்.சி முடிவு செய்துள்ளதால் இந்த முறைகேடு புகாரில் தொடர்புடையவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதே நேரத்தில் குரூப் 2 A தேர்விலும் முறைகேடாக தேர்வு எழுதி 35 இடங்களை பிடித்து தற்போது அரசு பணிகளில் சேர்ந்து கடந்த ஒரு வருடம் அரசு ஊதியமும் பெற்று விட்ட நிலையில் அதில் முறைகேடு செய்தவர்களையும் விசாரணை நடத்தி கண்டறிய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.


Advertisement
சாலைகளில் சுற்றித் திரிந்த மாடுகளை பிடித்த கும்பகோணம் மாநகராட்சி ஊழியர்கள்..
தேவாலய நில மோசடி வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றம் - மதுரை உயர்நீதிமன்றம்
கனமழையால் குறுவை நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் - விவசாயிகள் வேதனை
கோவா கடல் பகுதியில் விசைப்படகு மீது நீர்மூழ்கி கப்பல் மோதி விபத்து..
வேலூரில் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி..
குற்றச் செயல்களில் உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்கிறது - அமைச்சர் சேகர் பாபு
போக்ஸோ வழக்கில் முன்னாள் ராணுவ வீரருக்கு 25 ஆண்டு சிறை தண்டனை
இயக்குநர் பா.ரஞ்சித், கானா இசைவாணி மீது புகார்
வாந்தி, வயிற்றுபோக்கு ஏற்பட்டு 4 வயது குழந்தை உயிரிழப்பு
ஆந்திர மாநில பக்தர்கள் வந்திருந்த பேருந்தில் ஏறி திருட முயற்சி... போலீசில் பிடித்துக் கொடுத்த பொதுமக்கள்

Advertisement
Posted Nov 22, 2024 in இந்தியா,Big Stories,

அதானி குழுமத்தின் மீது அமெரிக்கா பகீர் புகார்.. அதிகாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம்? ப்ரூக்ளின் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு..

Posted Nov 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சினிமா பாணியில் கொலை.. ஆட்டோ குணாவை ஊசியால் ஆப் செய்த திருநங்கைகள்..! வாசலில் காவல் காத்த மனைவி..

Posted Nov 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

“அந்த பையன் வேண்டாங்கா... தம்பியின் பேச்சை கேட்ட ஆசிரியைக்கு நேர்ந்த சோகம்..! பள்ளியில் கத்தி குத்து சம்பவ பின்னணி

Posted Nov 20, 2024 in உலகம்,Big Stories,

அமெரிக்க ஏவுகணைகளை ஏவிய உக்ரைன் அணு ஆயுதங்களை கையில் எடுக்கும் ரஷ்யா ஆட்டம் காணும் நேட்டோ நாடுகள்... அணு ஆயுதம் என்ற பிரம்மாஸ்திரம்.. உச்சகட்ட பதற்றத்தில் ரஷ்யா-உக்ரைன் எல்லை..

Posted Nov 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

புதிய தமிழ்ப் படத்தை 7 நாட்கள் கழித்து தான் விமர்சனம் செய்யனுமாம்..! கங்குவாக்கு விழுந்த அடி அப்படி..!


Advertisement