கடலூர் அருகே மண்ணில் வீசப்பட்ட தேசியக் கொடியை பாதுகாத்த காவலருக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் பாராட்டி வெகுமதி அளித்தார்.
கடந்த மாதம் 20ஆம் தேதி கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற யாரோ ஒருவர் ஆர்பாட்டம் முடிந்தபின் தேசிய கொடியை சாலையிலேயே வீசிச் சென்றார்.
அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட தமிழ்நாடு சிறப்புக் காவல்படை 10வது அணியைச் சேர்ந்த காவலர் கார்த்திகேயன் தேசிய கொடி மண்ணில் கிடந்த தை கண்டு பதைபதைத்து, அதனை பாதுகாப்பாக வைத்தார்.
இந்தக் காட்சிகள் பரவிய நிலையில், காவலர் கார்த்திகேயனை சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் பாராட்டி, வெகுமதி வழங்கினார்.