2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் காட்டுமன்னார்கோயில் தொகுதியில் நிராகரிக்கப்பட்ட 102 தபால் வாக்குகளுடன் நேரில் ஆஜராக, மாவட்ட தேர்தல் அதிகாரியான கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
87 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க.வின் முருகுமாறன் வெற்றிக்கு எதிராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தரப்பில் போட்டியிட்ட திருமாவளவன் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.
நிராகரிக்கப்பட்ட102 தபால் வாக்குகளை ஆய்வு செய்ய வேண்டியுள்ளதால், அவற்றுடன் தொகுதி தேர்தல் அதிகாரியாக இருந்த முத்துகுமாரசாமி ஜனவரி 20-ஆம் தேதி ஆஜராக நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் முத்துகுமாரசுவாமி ஓய்வு பெற்று விட்டதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து கடலூர் மாவட்ட தேர்தல் அதிகாரியான மாவட்ட ஆட்சியர் தபால் வாக்குகளுடன் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.