உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை வீடியோ பதிவை தாக்கல் செய்ய வேண்டும் என்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு பின் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் அமர்வு முன்பு சுமார் 20க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் , வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடைபெற்றதாக முறையீடு செய்தனர்.
இதை கேட்ட நீதிபதிகள் வாக்கு எண்ணிக்கை மையங்களில் உள்ள வீடியோ பதிவுகளை ஒப்படைக்க உத்தரவிட்டனர். இந்த உத்தரவை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், வாக்கு எண்ணிக்கை வீடியோ பதிவை தாக்கல் செய்ய வேண்டும் என்ற உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவிட்டனர்.