சுட்டுக் கொல்லப்பட்ட உதவி ஆய்வாளர் வில்சனின் குடும்பத்துக்கு 1 கோடி ரூபாய் நிவாரண உதவியாக வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், வில்சன் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துள்ளார்.
அவருடைய குடும்பத்துக்கு நிவாரண உதவி வழங்கப்படும் எனவும், அவரின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதிக்கு ஏற்றாற்போல், கருணை அடிப்படையிலான அரசுப் பணி வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் கூறியதை குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, வில்சனின் உயரிய தியாகத்தை கருத்தில் கொண்டு, அவருடைய குடும்பத்துக்கு 1 கோடி ரூபாய் நிவாரண உதவியாக வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் முதல்வர் அறிவித்துள்ளார்.