செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

குரூப் 4 முறைகேடு.. கருப்பு ஆடு ஓட்டம்..!

Jan 10, 2020 04:22:41 PM

தமிழகத்தில் நடைபெற்ற குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ள நிலையில், 300க்கு 289 புள்ளி 5 மதிப்பெண் பெற்று  மாநில அளவில் முதலிடம் பிடித்த ஆடு மேய்க்கும் தொழிலாளி தலைமறைவானதாக தகவல் வெளியாகி உள்ளது.

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வை 16 1/2 லட்சம் பேர் எழுதிய நிலையில் முதல் 100 இடங்களை பிடித்தவர்களில் ராமநாதபுரம் மாவட்டத்தின் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதிய 40 பேர் முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பதாக புகார் எழுந்தது.

இந்த இரு தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய அந்த 40 பேரில் 90 சதவீதம் பேர் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகின்றது. உதாரணத்துக்கு இந்த தேர்வில் மாநில அளவில் முதல் இடம் பிடித்த சிவகங்கை மாவட்டம் பெரிய கண்ணனூர் கிராமத்தை சேர்ந்த 46 வயதான திருவராஜ் என்னும் ஆடுமேய்க்கும் தொழிலாளி.

தொடர்ந்து படித்து இந்த தேர்வை எழுதியவர்கள் கூட 300க்கு 250 மதிப்பெண்ணை எட்டிப்பிடிப்பது சவாலான விஷயம் என்ற நிலையில் 25 வருடங்களுக்கு முன்பு கல்லூரி படிப்பை முடித்து விட்டு ஆடு மேய்க்கும் தொழிலை பிரதானமாக செய்து சற்று வசதியுடன் வாழ்ந்து வரும் திருவரசு என்று அழைக்கப்படும் திருவராஜ், 300க்கு 289.5 மதிப்பெண் எடுத்தது எப்படி என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

இந்த தேர்வு முறைகேடு தொடர்பாக தேர்வாணையம் விசாரணையை தொடங்கி உள்ள நிலையில், முறைகேட்டில் ஈட்டுபட்டு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற கருப்பு ஆடுகள் கலக்கத்தில் உள்ளதாக கூறப்படுகின்றது. பலர் விசாரணைக்கு ஆஜராகாமல் இருப்பதற்காக, தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில், முதல் இடம் பிடித்த ஆடு மேய்க்கும் தொழிலாளி திருவராஜுவின் வீட்டிற்கு சென்ற போது, அவர் பகல் நேரங்களில் வீட்டிற்கு வருவதில்லை என்றும், ஊர் அடங்கிய பின்னர் நள்ளிரவு நேரத்தில் வீட்டுக்கு வந்து விட்டு, அதிகாலையில் எழுந்து சென்று விடுவார் என்றும், அவரது ஊர்மக்கள் தெரிவித்தனர்.

அவரது மனைவியிடம் விசாரித்த போது தனது கணவர் வெளி ஊருக்கு சென்றிருப்பதாகவும் அவர் எபோது வருவார் என்று தெரியவில்லை என்று பேச்சை மடைமாற்றியுள்ளார். தேர்வுக்கு தயாராக திருவராஜ் படித்த புத்தகங்களை காண்பிக்க முடியுமா? என்று கேட்டதும் தனக்கு முக்கியமான வேலை இருப்பதாக கூறி வீட்டை பூட்டிவிட்டு அவர் வேக வேகமான சென்று விட்டார்.

இவரது ஊருக்கு அருகில் இளையன் குடியில் ஒரு தேர்வு மையம், சிவகங்கையில் ஒரு மையம் என்று இரு மையங்கள் உள்ள நிலையில் அங்கிருந்து 64 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தேர்வு மையத்தை தேடிச்சென்றது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

விசாரணைக்கு பயந்து திருவராஜ் தலைமறைவாகி விட்டதாக கூறப்படும் நிலையில் அவர் எழுதிய தேர்வு மையத்தில் தேர்வு எழுதி, அதிக மதிப்பெண் பெற்று தேர்வானவர்களை, சென்னைக்கு அழைத்து விசாரிக்க, டி.என்.பி.எஸ்.சி முடிவு செய்துள்ளதால் இந்த முறைகேடு புகாரில் தொடர்புடையவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதே நேரத்தில் குரூப் 2 A தேர்விலும் முறைகேடாக தேர்வு எழுதி 35 இடங்களை பிடித்து தற்போது அரசு பணிகளில் சேர்ந்து கடந்த ஒரு வருடம் அரசு ஊதியமும் பெற்று விட்ட நிலையில் அதில் முறைகேடு செய்தவர்களையும் விசாரணை நடத்தி கண்டறிய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

இந்த நிலையில், திடீரென செய்தியாளர்களை சந்தித்த, திருவராஜு, தாம் எந்த முறைகேட்டிலும் ஈடுபடவில்லை என்றும் மீண்டும் தேர்வு வைத்தாலும் எழுத தயாராக உள்ளதாகவும் விளக்கமளித்துள்ளார்.

2012ஆம் ஆண்டு முதல் 7 முறை இந்தத் தேர்வை எழுதி வருவதாகவும், ஆடு மேய்த்தல் தொடர்பாக பல மாவட்டங்களை சுற்றி வருவது வழக்கம் என்றும் அந்த வகையிலேயே ராமேஸ்வரம் மையத்தை தேர்வு செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையங்களில் டி.என்.பி.எஸ்.சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த இரு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் பெரும்பாலானோர் தேர்ச்சி பெற்றதும், அதிலும் தமிழக அளவில் முதல் 5 இடங்களைப் பிடித்தவர்கள் இதே மையத்தில் தேர்வு எழுதியிருந்ததும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், உரிய விசாரணை நடத்தப்படும் என டி.என்.பி.எஸ்.சி தரப்பில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி ராமநாதபுரம் வந்த அதிகாரிகள், தேர்வு மைய அதிகாரிகளிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதே பகுதியைச் சேர்ந்த சில கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.


Advertisement
கல்லூரி பேருந்து சாலையோர மரத்தில் மோதி விபத்து ..
தேனீக்கள் வளர்ப்பது இவ்வளவு சுலபமா..? மாதம் ரூ.50 ஆயிரம் லாபம்..! ஒரு நாள் பயிற்சி தர்ராங்க..
மூடப்படாத குடிநீர் பைப் பள்ளம் - விபத்தில் சிக்கி பச்சிளம் குழந்தை உயிரிழப்பு.
கை கொடுக்கும் காளான் வளர்ப்பு.. வாய்ப்பை வழங்கும் வேளாண் பல்கலை..
மதுரையில் மங்கி குல்லா கொள்ளையர்கள் கைவரிசை - சி.சி.டி.வி காட்சி வெளியீடு
புத்தக வெளியீட்டு விழாவில் விஜயுடன் பங்கேற்பது குறித்து ஆலோசித்து முடிவு - திருமா
விசாரணைக்கு அழைத்த நபர் வர மறுத்ததால் அடித்து,உதைத்த காவலர் இடமாற்றம் ..
8 செ.மீ மழையை தாங்கும் வகையில் வடிகால் அமைப்பு உள்ளன - அமைச்சர் கே.என்.நேரு
பழனி அருகே பேருந்தில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவிகளை மருத்துவமனையில் அனுமதி..
பள்ளி மாணவியை காப்பாற்றிய ஆயுதப்படை காவலர்.!

Advertisement
Posted Nov 05, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தேனீக்கள் வளர்ப்பது இவ்வளவு சுலபமா..? மாதம் ரூ.50 ஆயிரம் லாபம்..! ஒரு நாள் பயிற்சி தர்ராங்க..

Posted Nov 05, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கை கொடுக்கும் காளான் வளர்ப்பு.. வாய்ப்பை வழங்கும் வேளாண் பல்கலை..

Posted Nov 05, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

50 கிராம் நகைக்காக மூதாட்டியை கொன்று டிராலியில் அடைத்த குடும்பம்..! நெல்லூர் டூ மீஞ்சூர் ரெயில் திகில்..

Posted Nov 05, 2024 in Big Stories,

மாடியில தொட்டிக் கட்டி“காய்கறி தோட்டம் ”நகரத்து பெண் விவசாயி..! வாங்க நாமும் தோட்டம் அமைக்கலாம்

Posted Nov 05, 2024 in உலகம்,Big Stories,

தேர்தலுக்கு தயாராகும் அமெரிக்கா! உலகின் வித்தியாசமான தேர்தல் முறை அதிபர் தேர்வு நடப்பது எப்படி?


Advertisement