தமிழகம் முழுவதும் பல்வேறு சிவன் கோவில்களில் திருவாதிரையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை பக்தி பெருக்குடன் தரிசித்தனர்.
திருவள்ளூர் அடுத்த திருவாலங்காட்டில் உள்ள வடராண்யேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற ஆருத்ரா தரிசனத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக சுவாமிக்கு விபூதி, சந்தனம், கதம்பத்தூள், நெல்லிப்பொடி, வில்வப்பொடி, உள்ளிட்ட 33வகையான பொருட்களில் அபிஷேகங்கள் நடைபெற்றன.
காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் ஆலயத்தில் திருவாதிரையை முன்னிட்டு சுவாமிக்கு விடிய விடிய நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தில் திருவாதிரை திருவிழாவை முன்னிட்டு நேற்றிரவு ராஜநாராயண மண்டபத்தில் தியாகராஜ சுவாமிக்கு ஆருத்ரா மகா அபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.
காரைக்கால் அடுத்துள்ள திருநள்ளாறில் அமைந்துள்ள தர்ப்பாரண்யேஸ்வர சுவாமி ஆலயத்தில் ஆரூத்ரா தரிசனத்தின் முக்கிய நிகழ்வான பொன்னூஞ்சல் உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.
காரைக்கால் அடுத்து கோவில்பத்து பகுதியில் அமைந்துள்ள பார்வதீஸ்வரர் ஆலயத்தில் ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு நடராஜர் வெள்ளை சாற்று அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் அமைந்துள்ள குற்றாலநாதர் ஆலயத்தில் திருவாதிரை திருவிழாவை முன்னிட்டு குற்றாலநாதருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தில் திருவாதிரை ஆருத்ரா தரிசன விழாவையொட்டி நடராஜருக்கு அதிகாலை சிறப்பு அபிஷேகங்கள் நடைப்பெற்றன.
தொடர்ந்து தியாகராஜ சுவாமி பதஞ்சலி முனிவர் மற்றும் வியக்ரபாத முனிவர்களுக்கு இடது பாதம் காட்டும் பாத தரிசன நிகழ்ச்சியும், நடராஜர், சிவகாம சுந்தரி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் வீதியுலாவும் நடைப்பெற்றது. இதில் அதிகாலை முதலே திரண்ட ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமிதரிசனம் செய்தனர்.
நெல்லையில் உள்ள பிரசித்திபெற்ற நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் திருக்கோயில் தாமிரசபையில் இன்று அதிகாலை நான்கு 30 மணியளவில் நடராஜர் திருத்தாண்டவமாடிய ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடந்தது.
முன்னதாக நடராஜ பெருமானுக்கு சிறப்பு திருமஞ்சனம், பசு தீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சிவபெருமான் திரு நடனம் ஆடிய ஐந்து சபைகளில் ஒன்றாக போற்றப்படும், நெல்லை மாவட்டம் செப்பறையில் உள்ள அழகிய கூத்தர் திருக் கோவிலில், அதிகாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.
தொடர்ந்து ஆருத்ரா தரிசன பூஜைகள் மற்றும், கோ பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் மீனாட்சி சொக்கநாதர் ஆலயத்தில் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.
இதையொட்டி நடராஜ பெருமானுக்கு அதிகாலை 11 வகையான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் திருவெம்பாவை பாடல்கள் பாடி சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். பக்தர்களுக்கு களி, பிட்டு, சுண்டல் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
சேலத்தில் உள்ள பிரசித்திபெற்ற சுகவனேஸ்வரர் ஆலயத்தில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி நடராஜருக்கு பல வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று நடராஜரை வழிபட்டனர்.
இதேபோல உத்தம சோழபுரம் கரபுரநாதர், பேளூர் தான்தோன்றீஸ்வரர், தாரமங்கலம் கைலாசநாதர் ஆலயங்களிலும் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நடந்தது.
சேலத்தில் உள்ள பிரசித்திபெற்ற சுகவனேஸ்வரர் ஆலயத்தில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி நடராஜருக்கு பல வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று நடராஜரை வழிபட்டனர்.
கோவையை அடுத்த பேரூர் பட்டீஸ்வரர் ஆலயத்தில் ஆருத்ரா தரிசன விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை நடராஜ பெருமான் - சிவகாமி அம்மையாருக்கு மகாபிஷேகம், சிறப்பு அலங்காரமும், தொடர்ந்து சுவாமி திருவீதி உலாவும் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் உள்ள ஸ்ரீவேதபுரீஸ்வரர் திருக்கோயிலில் திருவாதிரை ஆருத்ரா திருவிழா சிறப்பாக நடந்தது. இதையொட்டி நடராஜர் - சிவகாம சுந்தரி அம்பாளுக்கு 54 வகையான பழங்களால் சிறப்பு அபிஷேகம், மற்றும் மலர் அலங்காரம் நடைபெற்றது. பின்னர் மாடவீதிகளில் நடைபெற்ற சுவாமி வீதி உலாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
ராமேஸ்வரம் கோயிலில் ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு அதிகாலை மாணிக்க வாசகர் உலாவும், தொடர்ந்து ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
கோவையை அடுத்த பேரூர் பட்டீஸ்வரர் ஆலயத்தில் ஆருத்ரா தரிசன விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை நடராஜ பெருமான் - சிவகாமி அம்மையாருக்கு மகாபிஷேகம், சிறப்பு அலங்காரமும், தொடர்ந்து சுவாமி திருவீதி உலாவும் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தேனியில் உள்ள மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு அதிகாலையில் சிறப்பு யாகம் மற்றும் கோமாதா பூஜை நடைபெற்றது. பின்னர் பால், பன்னீர், சந்தனம், இளநீர், விபூதி ஆகியவற்றால் அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் உள்ள அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி நடராஜர், சிவகாமியம்மனுக்கு நெல்லிப்பொடி, பாசிப்பயறு மாவு, வில்வப்பொடி, நெல்லிப்பொடி உள்ளிட்ட 48 வகையான சிறப்பு அபிஷேகம் மற்றும் அந்திமந்தாரை, சம்பங்கி, தாமரை, செவ்வந்தி, விருட்சப்பூ உள்ளிட்ட மலர்களால் அலங்காரம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
சென்னை மைலாப்பூரில் உள்ள விருபாட்சீஸ்வரர் ஆலயத்தில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி,7 நடராஜர் சிலைகள் வீதி உலா வந்து, சந்திக்கும் உற்சவம் நடைபெற்றது.
கபாலீஸ்வரர், காரணீஸ்வரர், விருபாட்சீஸ்வரர், மல்லீஸ்வரர், வெல்லீஸ்வரர், வாலீஸ்வரர் மற்றும் தீர்த்தபாலீஸ்வரர் ஆகிய 7 கோவில்களில் இருந்து கொண்டு வரப்பட்ட நடராஜர் சிலைகளுடன், வீரபத்ரர், ஏகாம்பர ஈஸ்வரர் மற்றும் அம்பாள் சிலைகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து தேர்களில் எழுந்தருளி வீதி உலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுக்க நட்டு சுப்பராயன் தெருவை அடைந்தது.
அங்கு எதிரில் நாயன்மார்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி மற்றும் மாணிக்கவாசகர் ஆகியோர் தேரில் பவனி வந்து நடராஜரை தரிசிக்கும் உற்சவம் நடைபெற்றது.
இதில் சிவனடியார்கள் மற்றும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
உலகப்பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன உற்சவ விழாவில், அதிகாலை ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜமூர்த்திக்கும், சிவகாமசுந்தரி அம்பாளுக்கும் மகாபிஷேகம் நடைபெற்றது. பால், தேன், விபூதி, பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம் உள்ளிட்டவைகளால் குடம் குடமாக அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர் ஆயிரங்கால் மண்டபத்தில் திருவாபரண அலங்காரமும், பக்தர்கள் காணிக்கையாக அளித்த தங்க நாணயங்களால் அம்பாளுக்கும் நடராஜப் பெருமானுக்கும் கனகாபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அர்ச்சனைகள் நடைபெற்றன.
தொடர்ந்து ஊஞ்சல் உற்சவம், பஞ்சமூர்த்திகள் வீதி உலா மற்றும் நடராஜர்- சிவகாம சுந்தரி அம்பாள் நடன காட்சியும் நடைபெற உள்ளதால், இதனைக் காண உள்நாட்டில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கணக்கில் பக்தர்கள் குவிந்துள்ளனர்.
விழாவையொட்டி கடலூர் மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டிஎஸ்பி கார்த்திகேயன் தலைமையில் 300 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதுடன், சிசிடிவி கேமரா மூலமும் கண்காணித்து வருகிறார்கள்.
தூத்துக்குடியில் உள்ள பழமை வாய்ந்த சிவன் கோவிலில் திருவாதிரை ஆருத்ரா விழாவையொட்டி சுவாமி, நடராஜர் திருக்கோலத்தில் காட்சி அளித்தார். அவருக்கு சிறப்பு பூஜை மற்றும் நடன தீபாரதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
வேலூர் கோட்டையிலுள்ள அகிலாண்டீஸ்வரி சமேத ஸ்ரீஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி, ஸ்ரீநடராஜ மூர்த்திக்கு பால் தேன்,தயிர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 21 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் நடராஜர் - சிவகாமசுந்தரி அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு திருவீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
உலகப்பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன உற்சவ விழாவில், அதிகாலை ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜமூர்த்திக்கும், சிவகாமசுந்தரி அம்பாளுக்கும் மகாபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து ஊஞ்சல் உற்சவம், பஞ்சமூர்த்திகள் வீதி உலா மற்றும் நடராஜர்- சிவகாம சுந்தரி அம்பாள் நடன காட்சி ஆகியவை நடைபெற உள்ளதால், இதனைக் காண உள்நாட்டில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கணக்கில் பக்தர்கள் குவிந்துள்ளனர்.
விழாவையொட்டி கடலூர் மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டிஎஸ்பி கார்த்திகேயன் தலைமையில் 300 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதுடன், சிசிடிவி கேமரா மூலமும் கண்காணித்து வருகிறார்கள்.
ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் உள்ள குடவறையால் உருவான நடராஜர் சிலைக்கு சிறப்பு பூஜை மற்றும் அலங்காரங்கள் செய்யப்பட்டன.
தொடர்ந்து உற்சவர் நடராஜருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, சிவகாம சுந்தரி அம்பாளுடன் மலையைச் சுற்றி தேரில் கிரிவலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
ஈரோடு கோட்டை ஆருத்ரா கபாலீஸ்வரர் கோவிலில், ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு இன்று அதிகாலையில் உற்சவர் நடராஜர் மற்றும் வாரணாம்பிகைக்கு அபிசேகம் ஆராதனைகள் நடைபெற்றது.
தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட நடராஜரை பக்தர்கள் தோளில் சுமந்தபடி நகர்வலம் வந்தனர். இதில் பங்கேற்ற பெண்கள் கும்மிப்பாடல்களை பாடியபடி சுவாமியை வழிபட்டனர்.