சொத்து உரிமையாளர்கள் மற்றும் வாடகைதாரர்களிடையே ஒப்பந்தம் மேற்கொள்ளும் அவகாசத்தை 365 நாட்களாக உயர்த்த வழிவகை செய்யும் சட்டத்திருத்த மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
கடந்த 2017ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தால், இருதரப்பினர் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ள 90 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது. பின்னர் அந்த அவகாசம் 210 நாட்களாக உயர்த்தப்பட்ட நிலையில், அதை மேலும் அதிகரிக்க வேண்டுமென அரசுக்கு கோரிக்கைகள் வந்தன.
இதையேற்று அரசால் உருவாக்கப்பட்ட சட்டத் திருத்த மசோதா நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தால் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து சொத்து உரிமையாளர்கள் மற்றும் வாடகைதாரர்கள், ஒப்பந்தத்தை அடுத்த ஒரு ஆண்டுக்குள் பதிவுத்துறை அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.