சென்னை மாநகரில் வசிக்கும் குடிசைப்பகுதி மக்களுக்கு படிப்படியாக மாற்று குடியிருப்புகள் வழங்கப்பட்டு வருவதாக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சட்டப் பேரவையில் இதுகுறித்து திமுக உறுப்பினர் சேகர்பாபு எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், சென்னை மாநகரில் குடிசைப் பகுதிகளில் வசித்த 14 ஆயிரத்து 857 குடும்பங்களில் 10 ஆயிரத்து 740 குடும்பங்கள் பெரும்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இடமாற்றம் செய்யப்படும் குடும்பங்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் , கல்வி நிறுவனங்கள், இடுகாடு , சுடுகாடு மற்றும் இடமாற்ற படியாக 5,000 ரூபாய், பிழைப்பூதியமாக ஒரு வருடத்திற்கு மாதம் 2000 ரூபாய் வழங்கப்படுவதாகவும் துணை முதலமைச்சர் கூறினார்.