குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கொடுத்த தீர்மானத்தை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளாததை கண்டித்து, திமுக உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
பேரவையில் திமுக கொடுத்த தீர்மானத்தின் மீதான விவாதம் குறித்து எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் கேள்வி எழுப்பினார். அப்பொழுது குறுக்கிட்ட சபாநாயகர், தீர்மானம் ஆய்வில் உள்ளதாகவும், உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இன்றுடன் பேரவை கூட்டம் நிறைவடைய உள்ளதால், சபாநாயகரின் பதில் திருப்தி அளிக்கவில்லை எனக் கூறி திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
Watch Polimer News Online at https://bit.ly/2Qrv39p