ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் பிரசித்தி பெற்ற கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தீக்குண்டம் இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர்.
கடந்த மாதம் 26-ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் திருவிழா தொடங்கிய நிலையில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் இன்று பக்தர்கள் தீக்குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
15 நாட்கள் கடும் விரதமிருந்த பக்தர்கள் 3 நாட்களுக்கு முன்பே வரிசையில் காத்திருந்து தீக்குண்டம் இறங்கினர். ஈரோடு, கரூர், கோவை, திருப்பூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
Watch Polimer News Online at https://bit.ly/2Qrv39p