விரைவு ரயிலில் இருந்து நீக்கப்பட்ட இரண்டு பெட்டிகளை மீண்டும் இணைக்க வலியுறுத்தி, செங்கல்பட்டு அருகே, 2வது நாளாக பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காலை நேரத்தில் பாண்டிச்சேரியில் இருந்து சென்னை வரும் விரைவு ரயிலில் 12 பெட்டிகள் இருந்தன. பயணிகளின் எண்ணிக்கை குறைந்ததாகக் கூறி, கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக 2 பெட்டிகள் நீக்கப்பட்டன.
ஆனால் ரயிலில் கூட்ட நெரிசல் ஏற்படுவதால் மீண்டும் அந்த 2 பெட்டிகளை இணைக்கக் கோரி, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் பயணிகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது ரயில் பெட்டிகளை இணைப்பதாக ரயில்வே அதிகாரிகள் உறுதியளித்தனர். எனினும் இன்று அதே 10 பெட்டிகளுடன் ரயில் வந்ததால் ஆத்திரமடைந்த பயணிகள் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2 நாட்களில் ரயில் பெட்டிகள் இணைக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் உறுதியளித்ததன் பேரில், மறியலை கைவிட்டு ரயிலில் ஏறி பயணித்தனர்.
Watch Polimer News Online at https://bit.ly/2Qrv39p