கடந்த 4 நாட்களாக நடைபெற்று வரும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இன்றுடன் நிறைவடைகிறது.
இந்தாண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கடந்த 6ந் தேதி உரைநிகழ்த்தினார். அதன்பின்னர் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் நேற்று உரைநிகழ்த்தினார்.
சட்டபேரவையில் நடந்த விவாதங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பதிலளிக்கிறார். சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட 3 மசோதாக்கள் இன்று நிறைவேற்றப்பட உள்ளன.
Watch Polimer News Online at https://bit.ly/2Qrv39p