தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிகளை தொடர்ந்து பின்பற்ற மறுத்ததன் காரணமாகவே, ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கின் இறுதிகட்ட விசாரணை நடைபெற்றது. இதில் மக்களுக்கு சுத்தமான காற்று, குடிநீர் வழங்குவது அரசின் கடமை என்ற அடிப்படையில், ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு கொள்கை முடிவு எடுத்ததாக தமிழக அரசு தெரிவித்தது.
இதைதொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் , மீண்டும் ஆலையை திறக்க உத்தரவிட்டால் அனைத்து விதிகளையும் பின்பற்றுவதாகவும், கூடுதல் கட்டுப்பாடு விதித்தால் அதை பின்பற்றவும் தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.