சேலம் அரசு மருத்துவமனை பிரசவ வார்டில், கர்ப்பிணி பெண்களுக்கான பாதுகாப்பு முறை குறித்து விளக்கம் அளிக்க எல்இடி டிவி வசதி செய்யப்பட்டுள்ளது.
இங்கு சுகாதாரத் துறையின் இலவச மகப்பேறு திட்டத்தில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகள் பயன்பெறும் வகையில் ஒரு பயனாளிக்கு ரூபாய் 18 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இத்திட்டத்தை வரவேற்று இன்னர் வீல் கிளப் ஆப் சேலம் மைதிரி (inner wheel club of Salem mythri) என்ற அமைப்பு சார்பில் இலவசமாக எல்இடி டிவி வழங்கப்பட்டுள்ளது.
Read More : போலீஸ் வாகனம் மீது ஏறி டிக் டாக் பதிவு - அனைவரது பாராட்டையும் பெற்ற போலீசாரின் தண்டனை
இதனை அங்குள்ள பிரசவ வார்டில் பொருத்தி கர்ப்பிணி பெண்கள் எவ்வாறு பாதுகாப்பான முறையில் இருக்க வேண்டும் என்பன தொடர்பான குறிப்புகள் காண்பிக்கப்பட்டு விளக்கம் அளிக்கப்படுகிறது.
இந்நிகிழ்ச்சியில் மருத்துவமனை டீன் பாலாஜிநாதன், கண்காணிப்பாளர் மருத்துவர் தனபால், இன்னர் வீல் கிளப் ஆப் சேலம் மைத்ரி அமைப்பின் தலைவர் சரஸ்வதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Watch More ON : https://bit.ly/35lSHIO