இந்தியா - இலங்கை இடையே ஒப்பந்தம் கையெழுத்தானால், இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை சாத்தியம் என்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பேசியபோது எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் இதுகுறித்து கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர், பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா, ஜெர்மனி ஆகிய 4 நாடுகளுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் மூலம் 1 லட்சம் பேர் இரட்டைக் குடியுரிமை பெற்றிருப்பதாகவும், அதேபோல இலங்கையுடனும் ஒப்பந்தம் செய்து கொண்டால் அந்நாட்டைச் சேர்ந்த தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை சாத்தியம் எனவும் கூறினார்.