மத்திய பாஜக அரசில் அங்கம் வகித்தபோது, குடியுரிமை சட்டத் திருத்தத்தை ஆதரித்தது திமுக தான் என, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியிருக்கிறார். மத்திய காங்கிரஸ் அரசில் அங்கம் வகித்தபோது, இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க, திமுக வலியுறுத்தாதது ஏன்? என்றும் வினவியிருக்கிறார்.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய திமுக உறுப்பினர் ஜெ.அன்பழகன், குடியுரிமை சட்ட திருத்தம் பற்றி கேள்வி எழுப்பினார். இதற்கு விரிவாகவும், ஆதாரப்பூர்வமாகவும், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதிலளித்தார்.
மத்திய காங்கிரஸ் அரசில் அங்கம் வகித்தபோது, இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க, திமுக வலியுறுத்தாதது ஏன்? என்றும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வினவியிருக்கிறார்.