ஈரோடு மாவட்டத்தை 2 ஆக பிரிப்பது தொடர்பாக தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொது செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சி தேர்தலில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது. அதில் பங்கேற்றப்பின் செய்தியாளர்களை சந்தித்த ஈஸ்வரன், நிர்வாக வசதிக்காக ஈரோடு மாவட்டத்தை இரண்டாக பிரித்து கோபிசெட்டிபாளையம் மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்பது தங்களின் நீண்ட நாள் கோரிக்கை என்றார்.