குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து விவாதிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படவில்லை எனக்கூறி, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள், சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்புச் செய்தனர்.
இன்று கேள்விநேரம் முடிந்த பிறகு, ஜீரோ ஹவர் எனப்படும், நேரமில்லா நேரத்தில் பேசிய சட்டமன்ற எதிர்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பேச ஆரம்பித்தார்.
அப்போது பேசிய சபாநாயகர் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக நீங்கள் கொடுத்த கடிதம் ஆய்வில் இருப்பதாகவும், அது குறித்து தற்போது சட்டப்பேரவையில் விவாதிக்க முடியாது என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக திமுக, காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களும், கருணாஸ், தமிமுன் அன்சாரி உள்ளிட்டோர் வெளிநடப்புச் செய்தனர்.
Watch Polimer News Online at https://bit.ly/2Qrv39p