நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற வாக்குகளையும் உள்ளாட்சி தேர்தலில் பெற்ற வாக்குகளையும் கணக்கிட்டு பார்த்தால் தி.மு.க.வின் வாக்கு வங்கி சரிந்துள்ளதாகவும் அதைத்தான் தேய்பிறை என்று கூறியதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த நிலை நீடித்தால் 2021 தேர்தலில் தி.மு.க. படுதோல்வி அடையும் என்று கூறினார்.
டி.என்.பி.எஸ்.சி. விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்கப்படும் என்றும் 7 பேர் விடுதலை விவகாரம் குறித்து வேறு தகவல் கிடைத்தால் சட்டப்பேரவையில் தெரிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.