மறுவாக்கு எண்ணிக்கை கோரிய மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் உரிய விளக்கத்தை பெற்று தெரிவிக்க அரசு வழங்கறிஞருக்கு உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை சேர்ந்த சிவக்குமார், 28 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததால் மறு வாக்கு எண்ணிக்கை கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இதேபோல், சிவகங்கை மாவட்டம் அல்லூர் ஊராட்சி வார்ட் உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியுற்ற சகுந்தலா என்பவர், பதிவான 250 வாக்குகளில் 9 வாக்குகளை காணவில்லை. அவற்றை கண்டுபிடித்து அதனடிப்படையில் முடிவுகளை வெளியிட வேண்டும் என மனுதாக்கல் செய்திருந்தார். மனுக்களை விசாரித்த நீதிமன்றம் விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தது.