கோவையில் பயனாளர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் கூடிய ஆயிரம் ரூபாய் பணத்தை அமைச்சர் எஸ்பி வேலுமணி வழங்கினார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தப்படி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கோவையில் உள்ள ராமலிங்க சௌடேஸ்வரி கூட்டுறவு பண்டக சாலை நியாய விலைக்கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பங்கேற்ற உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்பி வேலுமணி பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாய் பணத்தை வழங்கினார்.