உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வரம்பிற்குட்பட்ட 13 மாவட்டஉள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் சிசிடிவி பதிவுகளை மதியம் 12.30 மணிக்குள்ளாக தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் ஏராளமான குளறுபடிகள் நடைபெற்றதாக 10க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் முறையிட்டிருந்தனர். அதற்கு வாக்கு எண்ணிக்கை முடிந்து இரண்டு நாட்கள் ஆன நிலையில் சிசிடிவி பதிவுகளை சமர்ப்பிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
சிசிடிவி பதிவுகளை தரவிறக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதால் கூடுதல் கால அவகாசம் தேவை என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் மதியம் 1 மணிக்கு விசாரணைக்கு எடுப்பதாக கூறி வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.