திருவள்ளூர், கிருஷ்ணகிரி, நாகையில் புதிதாக கட்டப்படவுள்ள மருத்துவக்கல்லூரிகளுக்கு தலா 70 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு 9 புதிய மருத்துவக் கல்லூரிகளுடனான மருத்துவமனை கட்ட மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. அதன்படி, ராமநாதபுரம், திருப்பூர், நாமக்கல், விருதுநகர், திண்டுக்கல், நீலகிரி ஆகிய 6 இடங்களில் புதிய மருத்துவமனைகள் அமைக்க தமிழக அரசு ஏற்கனவே நிதி ஒதுக்கியது.
அதன் தொடர்ச்சியாக, மேலும் 3 இடங்களில் அமைக்கப்பட உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர், கிருஷ்ணகிரி, நாகையில் புதிதாக கட்டப்படவுள்ள மருத்துவமனைகளுக்கு ஆரம்பக்கட்ட பணிகளுக்கு தலா 70 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
Watch Polimer News Online at https://bit.ly/2Qrv39p