உள்ளாட்சித் தேர்தலில் செல்லாமல் போன வாக்குகள் அனைத்தும் அதிமுகவுக்கான வாக்குகளே என்றும், எனவே நடந்து முடிந்த தேர்தலில் தங்கள் கட்சியே முழுமையான வெற்றியை பெற்றது என்றும் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறினார்.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் 24 மனை தெலுங்கு செட்டியார் சங்கம் சார்பில் நடைபெற்ற விளக்கு பூஜை சிறப்பு யாகம் உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களை சந்திக்கையில் இதனைத் தெரிவித்தார்.