குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை மாவட்டந்தோறும் அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே மயிலத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாயை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பை அமைச்சர் ஆர்பி உதயகுமார் வழங்கினார். 14 ஆயித்து 396 குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வி.ஜி.ராவ் நகரில் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
திருவாரூர் கீழவீதியில் உள்ள நியாயவிலைக்கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வழங்கினார்.
கரூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்.
நாகை மாவட்டத்தில் உள்ள 4 லட்சத்து 66 ஆயிரம் 499 குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை அமைச்சர் ஓ.எஸ் மணியன் தொடங்கி வைத்தார்.
மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாய் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் செல்லூர் ராஜூ பங்கேற்றார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பு, ஆயிரம் ரூபாய் மற்றும் இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தை அமைச்சர் சேவூர் இராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
நெல்லை மாவட்டத்தில், அமைச்சர் ராஜலட்சுமி பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை துவங்கி வைத்து பயனாளிகளுக்கு வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை அமைச்சர்கள் மாஃபா பாண்டியராஜன் மற்றும் பெஞ்சமின் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி துவங்கி வைத்தார்.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார். முன்னதாக பொலவபாளையம் ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள புதிய ஊராட்சிமன்ற அலுவலக கட்டிடத்தையும் அமைச்சர் தொடங்கி வைத்தார்.