தமிழகம் முழுவதும் வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம்கள், இரண்டாவது நாளாக இன்றும் நடைபெறுகிறது.
கடந்த மாதம் 23-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், வாக்காளர் பெயர் சேர்ப்பு மற்றும் திருத்தம் செய்வதற்கான முகாம்கள் ஜனவரி 4, 5 மற்றும் 11, 12ம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி நேற்று துவங்கிய முகாமில் ஏராளமான இளைஞர்கள் ஆர்வமுடன் தங்களது பெயர்களை இணைப்பதற்கான விண்ணப்பங்களை அளித்தனர். மேலும் வாக்காளர்கள் பெயர் பிறந்த தேதி, முகவரி உள்ளிட்டவற்றில் திருத்தங்களை செய்யவும் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
https://www.nvsp.in/ என்ற இணையதளம் மூலமும், Voters Helpline என்ற செயலி மூலமும் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.