அரசு மருத்துவக் கல்லூரிகளில் மனநல மருத்துவ படிப்புக்கான இடங்களை அதிகரிக்க கோரிய மனுவுக்கு மத்திய - மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து வழக்கறிஞர் ரங்கநாயகி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல வழக்கில், மன நல மருத்துவ படிப்புக்களுக்கு 2 முதல் 4 மாணவர்கள் வரை மட்டுமே சேர்க்கப்படுவதாகவும், பல மருத்துவக் கல்லூரிகளில் மனநல மருத்துவ படிப்பு பாடமாக சேர்க்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு, மத்திய, மாநில அரசுகள் பிப்ரவரி 26ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தது.