ஜல்லிக்கட்டு போட்டிகளின் போது காயமடையும் காளைகளுக்கு ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடப்பாண்டில் அதிக இடங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டிருப்பதாகவும், இதுவரை 13 மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க சுமார் 750 காளைகள் வரை பதிவு பெற்றுள்ளது எனவும் அமைச்சர் கூறினார்.