சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி, வரும் 9 மற்றும் 10ம் தேதிகளில், விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 100 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிதம்பரம் நடராஜர் திருக்கோயிலில் மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசனம் நடத்தப்படுகிறது. அதனையொட்டி, பொதுமக்களின் வசதிக்காக, வரும் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் 100-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படும் என விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.முத்துகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி, விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர், செஞ்சி, திண்டிவனம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்றும், பொதுமக்கள் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.