தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், தமிழகம் மற்றும் கர்நாடகத்தை ஒட்டிய பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவுவதாக கூறப்பட்டுள்ளது. இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. வருகிற 8-ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும். அதன் பின்னர் மழை குறையும் என்றும் கூறப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஓரிரு இடங்களில் அவ்வப்போது லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், நகரின் அதிகப்பட்ச வெப்பநிலை, 87.8 டிகிரி பாரன்ஹீட்டாகவும், குறைந்த பட்ச வெப்பநிலை 75.2 டிகிரி பாரன்ஹீட்டாகவும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.