பொங்கல் பரிசு தொகுப்புடன் 1,000 ரூபாய் வழங்குவதற்காக 1,677 கோடி ரூபாயை யை கூட்டுறவு வங்கிகளுக்கு தமிழக அரசு அளித்துள்ளது.
பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் விதமாக, அனைத்து அரிசி பெறும் ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு பொருட்களுடன் 1,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது. வருகிற 9-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை ரேஷன் கடைகள் மூலம் இதை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்புடன் 1,000 ரூபாய் வழங்குவதற்காக 1,677 கோடி ரூபாயை கூட்டுறவு வங்கிகளுக்கு தமிழக அரசு அளித்து உள்ளது.