கடலூர் மாவட்டம் குமளங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான சான்றிதழில் வெற்றிபெற்ற தனது பெயருக்கு பதிலாக தோற்றவரின் பெயர் இடம் பெற்றுள்ளதாக கூறி தேர்தலில் வென்ற பெண் வேட்பாளர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
குமளங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு பூட்டு சாவி சின்னத்தில் விஜயலட்சுமியும், ஆட்டோ சின்னத்தில் ஜெயலட்சுமியும் போட்டியிட்டனர்.
இதில் ஆட்டோ சின்னம் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில் பெயர் குழப்பத்தினால் சான்றிதழிலில் ஜெயலட்சுமி என்பதற்கு பதிலாக விஜயலட்சுமி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயலட்சுமி தனது பெயர் மாற்றி குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறி வாக்கு எண்ணும் மையத்தினுள் தர்ணாவில் ஈடுபட்டார்.
இதற்கிடையே தோல்வியுற்ற விஜயலட்சுமி தரப்பினரும் தாங்கள் தான் வெற்றி பெற்றோம் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.