தமிழக ஆளுநரை பதவி நீக்கம் செய்ய உத்தரவிடக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்யக் கோரி கடந்த 2018-ஆம் ஆண்டு தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக மனுவில் கூறப்பட்டிருந்தது.
கடந்த 15 மாதங்களாக அதன் மீது எந்த முடிவும் எடுக்காமல், அரசியல் சாசன விதிகளை மீறி தமிழக ஆளுநர் செயல்பட்டுள்ளதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆளுநரை பதவி நீக்கம் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிடுமாறும் கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.