புதுப்பொழிவுடன் பிறந்துள்ள புதிய ஆண்டின் முதல் சூரிய உதயத்தை காண கன்னியாகுமரியில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.
நேற்றிரவு முதலே புத்தாண்டு கொண்டாட்டம் களைக் கட்டிய நிலையில் கடற்கரை, சுற்றுலா படகு தளங்கள், பூங்காக்கள் உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அலை மோதியது.
அதே போல் இன்று அதிகாலை திரிவேணி சங்கமத்தில் உள்ளூர், வெளியூர், வெளிமாநிலத்தவர் எனக் கூடிய நூற்றுக்கணக்கானோர், 2020 ஆண்டின் முதல் சூரிய உதயத்தை கண்டு ரசித்தனர்.
மேலும் கடலில் இறங்கி அலைகளுடன் விளையாடியும் ஒருவருக்குகொருவர் புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.