சிதம்பரம் - கடலூர் இடையே உள்ள கொத்தட்டையில் புதிய சுங்கச்சாவடி திறக்கப்பட்டுள்ள நிலையில், அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகக் கூறி 39 தனியார் பேருந்துகள் அந்த வழியாக செல்லாமல் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. விழுப்புரம் - நாகை தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்தப்பட்டு டோல்கேட் அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் கார் உள்ளிட்ட வாகனங்களுக்கு ஒருமுறை பயணத்துக்கு 125 ரூபாயும், பேருந்துகளுக்கு 425 ரூபாயும், கனரக வாகனங்களுக்கு 665 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. டோல்கேட்டில் கட்டணம் அதிகமாக உள்ளதாக கூறி பொதுமக்கள் அரசியல் கட்சியினர், லாரி, பஸ் உரிமையாளர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.