கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக குறைந்த வெப்பநிலை பதிவாகி வரும் நிலையில் நட்சத்திர ஏரி, ஜிம் கானா புல்வெளி பகுதி முழுவதும் பனி படர்ந்து ரம்மியமாக காட்சியளித்தது.
காலையில் சூரிய ஒளி பட்டதும் புல்வெளி மற்றும் ஏரியில் படர்ந்திருந்த பனி ஆவியாகி சென்ற காட்சி கண்களை கவரும் வகையில் இருந்தது.
உதகையில் உறைபனி துவங்கிய நிலையில், இன்று அதிகாலை நேரத்தில் குறைந்தபட்சமாக 6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியது. குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை நேரங்களில் பனிபடர்ந்து காணப்படுகிறது.