கடலூர் மாவட்டம் தொழுதூர் சுங்கச்சாவடி அருகே, சபரிமலை செல்லும் அனைத்து வாகனங்களையும் போக்குவரத்து போலீசார் நிறுத்தி கட்டாயமாக 100 ரூபாய் வசூலிப்பதாகக் கூறப்படுகிறது.
வாகனத்தின் அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தாலும், போலீசார் அடாவடி கட்டாய வசூல் செய்வதாகவும், 50 ரூபாய் கொடுத்தாலும் வாங்குவதில்லை என்றும் ஐயப்ப பக்தர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.